இன்று நாம் பார்க்கும் திருமங்கலம் நகரம் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் (கி.பி 1566) உருவாக்கப்பட்டதாக “இந்திய சரித்திரக் களஞ்சியம்- பாகம் 4 ” இல் நூலாசிரியர் ப.சிவனடி குறிப்பிடுகின்றார்.
இந்த நூலின் குறிப்பில் “திருமங்கலம்” ஊரை தம் குலத்தினருக்காவே உருவாக்கினார் என்று நூலாசிரியர் குறிப்பிடுவதைக் காண முடிகின்றது. தம் குலத்த்திற்காகவே உருவாக்கினேன் என்று சம்பந்தப்பட்ட மன்னர் செப்பேட்டிலோ அல்லது கல்வெட்டுச் செய்தியிலோ குறிப்பிடாமல் நூலாசிரியர் இந்தச் செய்தியை தர வாய்ப்பில்லை.
இந்த நூலில் உள்ள பக்கத்தின் சிறு குறிப்பு மட்டும் “கூகிள் புக்ஸ்” தரவில் கிடைப்பதால் இச்செய்தி பற்றி மேலும் அறியக் கிடைக்கவில்லை.
திருமங்கலம் நகர் என்பது குறிப்பிட்ட காலத்தில் உருவாகியிருக்கலாம் என்பதை அப்படியே ஏற்பதா என்பது தீவிர கேள்விக்குரியது. ஏனென்றால் கி.பி 12ம் நூற்றாண்டில் பாண்டிய-ஈழப்போர் செய்தி குறித்து சிங்கள பல்கலைகழகம் வெளியிட்ட ஆய்வு நூலில் திருமங்கலம்.சாத்தங்குடியில் பாண்டியர்களுக்கு படை உதவி செய்த கொங்கு வேட்டுவர் மற்றும் பல்லவராயர் அகம்படியரின் ( இன்றைய அகமுடையார் சாதியில் பல்லவராயர் பட்டம் கொண்டவர்) படைகள் குறிப்பிட்ட திருமங்கலம்.சாத்தங்குடி ஊர்களில் முகாமிட்டிருந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த சிங்கள நூலில் “திருமங்கலம்” மற்றும் “சாத்தங்குடி” போன்ற பெயர்கள் இடம் பெற்றிருப்பது எவ்வாறு? 12ம் நூற்றாண்டில் இன்றைய திருமங்கலத்திற்கு “திருமங்கலம்” என்ற பெயர் இருந்ததா?
இவ்வாறான பல கேள்விகளுக்கு விடையில்லை! ஆனால் திருமங்கலம் சுற்றியுள்ள ஊர்கள் பற்றி கல்வெட்டு ஆதாரங்கள் நிறைய கிடைத்துள்ளன ஆனால் திருமங்கலம் நகர் குறித்து 16ம் நூற்றாண்டு முன்பான தகவல்கள் பல வருடங்களாக தேடியும் கிடைக்காததால் திருமங்கலம் நகர் உருவாக்கம் குறித்த இக்கருத்தை சீர்துக்கிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
முதல் நிலை கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட சிங்கள நூலில் திருமங்கலம்,சாத்தங்குடிப் பெயர்கள் இருப்பதை அப்படியே விட்டுவிட முடியாது! ஒருவேளை அன்று திருமங்கலம் நகராக இல்லாமல் படைவீடாக பயன்பட்டிருக்கலாம் எனினும் மேலும் அதிக வரலாற்றைப் பற்றிய செய்திகள் கிடைக்கும் போது வரலாற்றின் மீதுள்ள முடிச்சுகள் அவிழும்!
வரலாறு விரிவடையும் .தொடர்ந்து திருமங்கலம் வரலாற்றை ஆய்வு செய்வோம்!
உங்களுக்குத் தெரிந்த செய்திகளை கமேண்டில் அளியுங்கள்!
ஆதாரங்கள் :
Book: History of Ceylon: From the Coḷa conquest in 1017 to the arrival of the Portuguese in 1505
Book by Ceylon University Press published year: 1960 ,Page numbers 502,503,504
பல்லவராயன் பேட்டை கல்வெட்டு
புதுக்கோட்டை கல்வெட்டுக்கள்
மேலத்திருமாணிக்கம் கல்வெட்டு -மதுரை கல்வெட்டுக்கள் தொகுதி (தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு)
சாத்தங்குடி கல்வெட்டு- -மதுரை கல்வெட்டுக்கள் தொகுதி (தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு)
ஆனையூர் (கட்டக்கருப்பன்பட்டி) கல்வெட்டு – மதுரை கல்வெட்டுக்கள் தொகுதி (தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடு)
#thirumangalam city founded by muthu krishnappa naicker