திருமங்கலம் நகரில் சங்கிலி பறிப்பு,இரவில் கடைகளை உடைத்து திருடுவது ,ரவுடிகள் தகராறில் ஈடுபடுவது போன்ற பிரச்சனைகள் நடைபெறுவதால் இவைகளை கண்காணிக்க கேமராக்கள் பொருத்துவது என திருமங்கலம் காவல் துறை மற்றும் வர்த்தக சங்கத்தால் தீர்மானிக்கப்பட்டது.
இதனையொட்டி வடக்கே மறவன்குளம் தொடங்கி தெற்கே தெற்கு தெரு வரை, கிழக்கே விமான நிலைய சாலை முதல் மேற்கே சந்தை பேட்டை வரை என மொத்தம் 146 இடங்களில் கண்காணிப்பு கேமாராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இந்த புதிய நடைமுறைக்கு திருமங்கலம் காவல் துறை, அரசு அமைப்பு, தன்னார்வலர்கள் , வர்த்தக சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் உதவியின் அடிப்படையில் அமையவிருக்கின்றது.
முதற்கட்டமாக 9 கேமராக்கள் பொருத்தப்பட்டு டிஎஸ்பி அலுவலக கட்டுபாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு நேற்று செயல்பாடு தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியை திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு.உதயகுமார் துவங்கி வைத்ததோடு தனது பங்களிப்பாக ரூ 5 இலட்சம் நிதி வழ்ங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர், திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி ,வர்த்தக சங்கத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புகைப்பட உதவி: திரு.பாபு(யமஹா பாபு) அவர்கள் திருமங்கலம்
more than 146 surveillance cameras will be installed in thirumangalam town to monitor the activities in and around tirumangalam town of madurai.