• Skip to main content
  • Skip to secondary menu
  • Skip to primary sidebar
  • Find Business or Service
  • Add Your Business
  • History
  • News
  • Contact

Business

  • History
  • News
  • Job Vacancies in Thirumangalam
  • Business

திருமங்கலத்தில் 1921ம் ஆண்டு பரவிய பிளாக் டெத் எனும் கொள்ளை நோய்

August 17, 2020 by administrator

Spread the love

இன்று உலகம் முழுவதும் இலட்சக்கணக்காணோரை கொன்று மிரட்டிக் கொண்டிருக்கும் கொரானா நோய் குறித்து நாம் மிகவும் அச்சமுறுகிறோம் என்றால் உலகில் கோடிக்கணக்காணோரை கொன்று குவித்த கொள்ளை நோய் ஒன்றும் இருந்துள்ளது.

அந்த கொள்ளை நோய் திருமங்கலத்தில் பரவிய தகவலை குறித்து பேசுகிறது .இந்த கட்டுரை.

 

மனித வரலாற்றிலேயே குறுகிய காலத்தில் கோடிக்கணக்காணோரை கொன்ற நோய் புபோனிக் பிளேக் எனும் தொற்று நோய் ஆகும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதங்கள்,விரல்கள் போன்ற உடல் பாகங்கள் கருப்பாக மாறிவிடும் என்பதால், இதனை `தி பிளாக் டெத்` அதாவது கருப்பு மரணம் என்றும் வரலாற்றாசிரியர்கள் அடையாளப்படுத்தினர்.

ஒரு நூற்றாண்டு முன்பு வரை இந்த பேரை கேட்டாலே பலருக்கும் மரண பயம் கண்ணில் தெரிய ஆரம்பித்து விடும்

இந்த வகை பாக்டீரியா விலங்குகளில் வாழும். குறிப்பாக அணில் போல காட்சியளிக்கும் ரோடண்ட் என்ற வகை விலங்குகளிலும், அதன் உடலில் உள்ள உண்ணிகளிலும் இந்த பாக்டீரியா அதிகம் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.

14ம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் பரவி ஆட்டிப்படைத்து 19ம் நூற்றாண்டு வரை தொடர்ந்து மரண பீதியை ஏற்படுத்தி வந்த நோய் ஐரோப்பியர்கள் மூலம் ஆப்பிரிக்கா,அமெரிக்கா,இந்தியா,சீனா என உலகம் முழுவதும் பரவி வந்தது தெரியவந்துள்ளது.

உலகம் முழுதும் மரணபயத்தை ஏற்படுத்திய இந்த கொள்ளை நோய் நமது திருமங்கலம் நகரில் 1921ம் வருடம் காணப்பட்டதாக ஆங்கிலேயரின் வெளியீடுகள் நமக்கு தகவல் அளிக்கின்றன.

கிறிஸ்துவத்தைப் பரப்ப மிஷனரிகளாக வந்த ஐரோப்பியர்கள் தங்கள் இயக்கத்தை 1838ம் ஆண்டு திருமங்கலத்தில் ஆரம்பித்ததாக தெரிகிறது.

இந்த மிஷினரி அமைப்புகளில் ஒன்றான Womans Board of Missions சார்பாக வெளியிடப்பட்ட book Life and light for woman நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நூல் குறிப்பின்படி மார்த்தா என்ற கிறிஸ்துவ பெண்மணி பாடம் நடத்துவதற்காக நகருக்கு சென்றதாகவும் பிளேக் போன்ற நோயினால் மக்கள் இறந்ததை காண முடிந்ததாகாவும்.
நகரில் இந்நோயினால் ஒரு நாளைக்கு நான்கு பேர் இறந்து வந்து பின்னாலில் ஒரு நாளைக்கு 10 பேர் என்று அதிகரித்ததாகவும்.
இறந்தவர்களின் வீட்டில் அடிக்கப்படும் டம் டம் சத்தம் நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

ஆகவே 1921ம் வருடம் இந்நோய் தீவிரமாக பரவியுள்ளது ஆங்கிலேயரின் இக்குறிப்பினால் தெரிய வருகின்றது.

மேலும் ஐரோப்பாவில் காணப்பட்ட இந்நோய் எப்படி நமது திருமங்கலம் நகரில் காணப்பட்டது என்பதை பற்றி நூலில் ஒரு வரிக்குறிப்பும் உள்ளது.

அதாவது ஆரம்பத்தில் சர்ச் பாதிரியார் ஒருவரின் வீட்டுக் காம்பெளன்டில் இரண்டு எலிகள் செத்துக் கிடந்ததாகவும் பின்னரே மனிதர்கள் சாகத் தொடங்கியதாகவும் இக்குறிப்பு சொல்கின்றது.

ஆகவே இக்குறிப்பின்படி பிளாக்டெத் எனும் இந்த கொடிய நோய் திருமங்கலத்திற்கு வந்த ஐரோப்பியர்க்கள் மூலமாக திருமங்கலம் மக்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. அதில் பலரும் அந்நோயினால் இறந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

ஆனால் இந்த நோய் குறித்து வரலாற்று தரவுகளில் அதிகம் பேசப்படாததால் திருமங்கலத்தில் பரவிய இந்த நோயை பின்னாளில் ஆங்கிலேயர்கள் ஒருவாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகின்றது.

மேலும் அந்நாளில் மக்கள் தொகை குறைவு என்பதோலும் வீடுகள் தவிர்த்த இடங்களில் உணவு என்பது மிக குறைவு, பேருந்து என்ற பொது போக்குவரத்து இல்லாமை , தியேட்டர் போன்ற பொது இடங்களை மக்கள் பயன்படுத்து இல்லை என்ற காரணங்களும் இதை ஒருவாறு கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்!

மேலதிகமான வரலாற்று தகவல்கள் கிடைத்தால் விடை கிடைக்கும்.

எது எப்படியோ. கோடிக்கணக்கானோரை கொன்ற கொள்ளை நோய் திருமங்கலத்தில் பரவி நூற்றுக்குள் உயிர் பலியை உண்டாக்கி விட்டு விடைபெற்றது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

Source: Vols. for Jan. 1873- published by the Woman’s Boards of Missions; for 1922 by the Congregational Woman’s Boards of Missions Page number 149

புபோனிக் பிளேக் பற்றி மேலும் அறிந்து கொள்ள.
https://www.bbc.com/tamil/global-53362890

தொடர்பான மற்ற செய்திகள்:

திருமங்கலத்தில் எடுக்கப்பட்ட மிகவும் பழமையான புகைப்படம்
திருமங்கலத்தில் காமராஜர் புகைப்படம் 1
திருமங்கலம் சிறப்புகள் -அரிய நூலில் இருந்து ஒரு பாடல்
மகாத்மா காந்தி 1927ம் ஆண்டு திருமங்கலம் வந்த போது என்ன பேசியிருப்பார்?

Filed Under: History Tagged With: appnews

Primary Sidebar

Latest Posts

பஜாஜ் பின் செர்வ்- திருமங்கலம் கிளைக்கு பணிக்கு ஆட்கள் தேவை

தனிஷ்க் கலெக்சன்ஸிற்கு வேலைக்கு பெண்கள் தேவை

திருமங்கலம் பாவம்மாள் பிராய்லர்ஸ் அலுவலகப்பணிக்கு பெண் தேவை

பலரும் அறியாத திருமங்கலத்தில் பிறந்த இசை மேதை

திருமங்கலம் வாணி பேக்கரியில் சேல்ஸ்மேன் சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு