கி.பி 1651ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக அறியப்படும் செப்பேட்டுச் செய்தி ஒன்றில் #திருமங்கலம் தேவாங்கர் சமுதாயத்தினர் பற்றிய தகவல் கிடைக்கப்பெற்றது. திருமங்கலம் மற்றும் மற்ற பகுதிகளைச் சேர்ந்த தேவாங்க செட்டியார் சமுதாயத்தினர் இணைந்து மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவிலுக்கு கட்டளை ஏற்படுத்தி கோவிலில் மரியாதை பெறும் உரிமையினை பெற்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது
ஆதாரம்: தமிழ்நாட்டுச் செப்பேடுகள் தொகுதி 2 ,ஆசிரியர் ச.கிரிஷ்ணமுர்த்தி ,பக்க எண்கள்: 79,80
(செப்பேட்டில் உள்ள விரிவான செய்தியைப் படிக்க இப்பதிவுடன் இணைக்கப்பட்ட படத்தைப் பார்க்கவும்)
செப்பேட்டின் காலம் கி.பி 1651 என்று வரலாற்று அறிஞர்களால் கணிக்கப்பட்டு இருப்பதால் இந்த தேவாங்க செட்டியார் சமுதாயத்தினர் குறைந்தபட்சம் 358 வருடங்களுக்கும் மேலாக திருமங்கலம் நகரில் வசித்து வருவது செப்பேட்டு செய்தி மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.
திருமங்கலம் சின்னக்கடை வீதியையும் ,திருமங்கலம் மார்கெட் பகுதியையும் இணைக்கும் பகுதியாக தெலுங்கர் தெரு ஒன்று உள்ளது. இந்தப் பகுதியில் பழமையான கோவில் ஒன்று உள்ளதை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு Thirumangalam.org வெப்சைட் நிர்வாகியான நாங்கள் பார்த்தோம் . இங்குள்ள மக்கள் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட செட்டியார் சமூகத்தினர்.
இந்த பழமையான கோவில் மற்றும் தெலுங்கர் என்ற பெயரிலேயே அமைந்திருக்கும் தெரு என்பதை வைத்துப் பார்க்கும் போது இந்த செப்பேடு குறிப்பிடும் தேவாங்க செட்டியார் சமூகத்தினர் திருமங்கலத்தின் இப்பகுதிலேயே வசித்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் அல்லது இதைப் பற்றிய அதிகம் செய்திகளை அறிந்தவர்கள் இங்குள்ள கமேண்டில் குறிப்பிடலாம்.
தொடர்ந்து பேசுவோம், அறிந்துகொள்வோம்,திருமங்கலம் வரலாறு!
telugu devanga chettiar cheppedu copper plate provides clues about devanga chettiyar community people of #thirumangalam #tirumangalam history